Wednesday 24 April 2013

குளிர் நீரில் 
குளிக்கும்போது,
ஆடை சுமை 
விண்மீன் பார்க்கும்போது,
வெகுதொலைவில்...
பூமி.
அருவிகளைவிடவும் உயர்ந்து 
கடல்களைவிடவும் ஆழமாய்..
தாகம்.
அற்புதமானது!
கடந்துவிடும் கணங்கள்,
கடந்துவிடுவதாலே...
கோடை தூறல்,
இளஞ்சூடாய் 
ஈரமண் வாசம் !
ஆழத்தில் விழும் பயமற்று 
அந்த முகட்டில் 
மலர். 

மலைக்கோவில் பாதை 
பட்டாம்பூச்சி கடக்கையில் 
தரிசனம்.
வனத்தின் பரப்பில்,
கொக்கு பறக்கும்
கணத்தில்.. நிலைக்கிறேன் 
சிலந்தி ஒன்று 
கிளையேறுகிறது,
மரம் தொடாமலே..
ஒற்றை மேகம் 
அற்பமல்ல,
அஸ்தமனம் கடக்கையில்
இரவில் 
அருகருகே...
வாடிகொண்டும், மலர்ந்துகொண்டும் !
இங்கே அஸ்தமிக்கும்
இதே சூரியன்..
எங்கோ விடியல்!
உயர்ந்த மரத்தின் 
காக்கை கூட்டில் 
எத்தனை குயில்கள் ?
உதிரும் சருகில் 
ஓர்  இறந்தகாலம்,
ஓர் எதிர்காலமும் கூட !
துளிர்ப்பதில் உள்ள 
அதே துடிப்புடன்...
உதிர்வும்!
கலங்கிய குட்டை,
சேறுபடியாமல் 
நிலா 

Murky Water..
Without stain,
Moon
கிளிஞ்சலில் 
தேங்கிய நீரும்..
கடல்.
இரவில் விழிக்கையில்,
வெண்நாரைகள்

விண்மீனை கடக்கின்றன 
ஒற்றை நிலா 
சிதறித் தெறிக்கின்றது..
கடல்வெளிஎங்கும்.

கடல்

 சப்தங்களால் 
அறியப்பட்டலும் 
ஆழ் மௌனமே ... 
 


Friday 19 April 2013

Night wind 
Plucks.. 
The Perfume of Garden 

இரவு காற்று 
பறித்து  செல்கிறது.. ,
பூந்தோட்ட நறுமணத்தை 

Wednesday 17 April 2013

உலர்ந்த நதி,
நிறைந்து தளும்பும் 
நாணல் மலர்கள் 

Tuesday 16 April 2013

You are here
Between the beats,
I am alive..
Deep Sleep..
Universe shrinks
Life expands!
Last night Rain
Broken branch
Blooms...

நேற்றிரவு மழையில் 
முறிந்த கிளை, 
மலர்கிறது..
Setting Sun
Fell into River...
While crossing the Bridge
விழிகளில் விண்மீன்
செவிகளில் சில்வண்டு
தனிமையின்  முழுமை 
அரை நிலவு
ஒளி ...
முழுமை 
நிலவின் ஒளியை,
மரம்
அசைக்கிறது..

Haiku 1

Summer Night
In a sudden rainy wind,
Frog raises its voice..